2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

‘அரசியலிலும் ஈடுபடுங்கள்’; பெண்களுக்கு அழைப்பு

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எதிர்காலத்தில் தற்போது இருப்பதை விட பெண்கள் இன்னமும் அரசியல்துறையிலும் ஈடுபாடுக் காட்ட வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய நிகழ்வு, பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர் கலாமதி தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டில் பெண்கள் பலதுறைகளிலும் சாதனை படைத்துள்ளார்கள். ஆனாலும், பெண் விகிதாசாரத்துக் கேற்ப அரசியலில் ஈடுபாடுகாட்டவில்லை என்ற குறை இலங்கைப் பெண்கள் சார்பில் உள்ளது. அதனை நிவர்த்திக்கும் வகையில் எதிர்காலத்தில் பெண்கள்  அரசியல் துறையிலும் ஈடுபாடுகாட்ட முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவையிட்டு, மாதர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் பெண் எழுச்சி தொடர்பான கலாசார நிகழ்வுகழும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .