2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அவசர நிலைமையில் தொண்டாற்ற 200 பேர் தயார்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 28 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் ஏற்படும் அவசர நிலைமையின்போது தொண்டாற்றுவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையைச் சேர்ந்த 200 தொண்டர்கள் ஆயத்தமாக உள்ளனர் என அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் ரி.வசந்தராசா தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகத் தெரிவு, மட்டக்களப்பு மன்றேசாவிலுள்ள அதன் மாவட்ட அலுவலகத்தில்  சனிக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அவசர மற்றும் அனர்த்தங்களின்போது தொண்டாற்றுவதற்காக பல தொண்டர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.   

இங்கு ஏதாவது அனர்த்தம் அல்லது அவசர நிலைமை ஏற்படும் வேளையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள் மனிதாபிமான பணிகளைச் செய்வதற்காக  களம்  இறங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனர்த்தம்  ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதேசக் கிளைகளும் கிராமிய மட்டத்தில் செஞ்சிலுவைச் சங்க அலகுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

'மட்டக்களப்பில் யுத்தம் காரணமாகப்; பாதிக்கப்பட்ட 27,000 கைம்பெண்கள் இருப்பதுடன், பாடசாலைகளுக்கு செல்லாத  10 சதவீதமான சிறுவர்கள் உள்ளனர்.

சுமார் 6,500 விசேட தேவையுடையோர் உள்ள குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .