2021 மே 06, வியாழக்கிழமை

'அஷ்ரப் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தவைர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மர்ம மரணத்துக்கான நீதியான விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சர்வதேச விவகார இணைப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அப்துல் காதர் மசூர் மௌலானா இன்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மர்ம மரணத்திற்கான நீதியான விசாரணைகளை ஆரம்பித்து குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுப்பது நல்லாட்சி அரசின் தார்மீக பொறுப்பாகும்.

தலைவர் அஷ்ரப்  மரணித்து  15 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் அவருடைய அகால மரணம் பற்றிய மர்மம் துலக்கப்படவில்லை என மக்கள் இன்றும் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.

அன்னார் விபத்தில் மரணித்தாரா அல்லது திட்டமிடப்பட்ட சதி முயற்சியின் காரணமாக மரணமடையச் செய்யப்பட்டாரா என்று பொறுப்பு வாய்ந்தவர்களால் இதுவரைத் தெரியப்படுத்தப்படவில்லை.

எனவே,தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அவற்றை இற்த அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இதற்காக நீதியானதும் நேர்மையானதுமான தனியானதொரு விசாரணைக் குழு அமைக்கப்படல் வேண்டும்.

அண்மையில் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான மர்மங்கள் ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வந்து மீண்டும் இவ்விசாரணையின் வேகம் தணிக்கப்பட்டது.

மேலும், அளுத்கம-தர்ஹா நகர் அசாம்பவிதங்கள்,வசீம் தாஜுதீன் படுகொலை மூடி மறைக்கப்படுவது போல நல்லாட்சியில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கான நீதியான விசாரணையும் மறைக்கப்படக் கூடாது என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .