2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'ஆட்சி மாற்றத்தின் பின்னரே ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம்'

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

2015ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை எனவும் 2015 எட்டாம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு  பின்னர்தான் ஓரளவு இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடிந்துள்ளது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவுதின பேருரை நிகழ்வு மட்டக்களப்பில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, அங்கு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'உயிரிழந்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஆண்டு தோறும் நினைவஞ்சலி செலுத்தி நினைவு தினங்களை நடாத்த வேண்டும்' என்றார்.

இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவிக்கையில், 'ஊடகவியலாளர் நடேசனின் ஊடகப்பணி என்பது மிகப் பெறுமதியானவை. இக்கட்டான அந்த காலகட்டத்தில் உழைத்த பல ஊடகவியலாளர்கள் இன்றும் இருக்கின்றார்கள். யாரையும் குறை கூறமுடியாது' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .