Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 23 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் பாக்கியநாதன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட 12 இந்தியப் பிரஜைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராசா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்த 5 பெண்களும் 7 ஆண்களும் காத்தான்குடியில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிடைக்கப்பெற்ற இரகசஜய தகவலையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (18) காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த 12 இந்தியப் பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago