Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 25, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றில் இருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டொன்றை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மீட்டுள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இருதயபுரம் பத்தாம் குறுக்கு வீதியிலுள்ள குறித்த பாழடைந்த வெற்றுக்காணியில் அருகிலுள்ள சிறுவர் பந்து விளையாட்டில் சம்பவதினம் ஈடுபட்டிருந்த போது குறித்த வெற்றுக்காணிக்குள் பந்து வீழ்ந்ததையடுத்து அங்கு சென்ற சிறுவர் பந்தை தேடும் போது பந்து வடிவிலான குண்டொன்றைக் கண்டு, அதனை எடுத்து வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் பந்து என காட்டிய போது அதனை கண்ட பெற்றோர் சிறுவனிடம் இருந்து அதனை பறித்து குறித்த வெற்றுக் காணியில் வீசியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதனையடுத்து குறித்த குண்டு தொடர்பாக இரவு 7 மணியளவில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிசார் கைவிடப்பட்டிருந்த கைக் குண்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை மட்டு தலைமையக பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago