2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டு. செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி ஆசிரியருமான பொ.உதயரூபன் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதல் மேற்கொண்டவரைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும்  மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் முன்பாக இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வழமை போன்று கடந்த சனிக்கிழமை (21) மகாஜனக் கல்லூரியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தது,  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் தாக்கப்பட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராச்சி குறித்த நபர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .