2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

உன்னிச்சை குளத்தில் நீராடிய இளைஞன் சடலமாக மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம்

விடுமுறை நாளை உல்லாசமாகக் களிப்பதற்காக  நண்பர்களோடு சேர்ந்து உன்னிச்சை குளத்தில் நீராடிய இளைஞன், சடலமாக மீட்கப்பட்டாரென, மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பொலஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி, அம்ரூஸ் வீதியை அண்டி வசிக்கும் நித்தியானந்தன் கபில்ராஜ் (வயது 22) என்ற இளைஞனே, நீரில் மூழ்கி மரணித்துள்ளார்.

சடலம், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக, கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இளைஞர்கள் நீராடிய பகுதியில் மணல் அகழப்பட்ட குழிகள் இருந்ததாக, பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான ஆழமான நீர்க் குழியிலேயே இவ்வளைஞன் அகப்பட்டு உயிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக, ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .