2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உரியவேளையில் உரமானியம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

விவசாயிகளின் நலன் கருதி கடந்த வருடம் மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உரமானியத் திட்டத்தின் நன்மை உரிய வேளையில் கிட்டியுள்ளதாக மட்டக்களப்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் 37 ஆயிரத்து 621 பேருக்கு  சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உரமானியம் இதுவரையில்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா சிவலிங்கம், இன்று (18) தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு 5,000 ரூபாயை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக்கூடியது 05 ஏக்கர் நெற்செய்கைக்கே உரமானியம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில்,  விவசாயி ஒருவர் 05 ஏக்கருக்கான உரமானியமாக 25 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொள்கின்றார்.

இவ்வாண்டு பெரும்போகத்தின்போது, இலங்கையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளே முதன்முதலில் உரமானியத்தை உரிய வேளையில் பெற்றிருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .