Niroshini / 2016 மார்ச் 29 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியதைப் போன்று கனவு காணுங்கள் கனவினை நனவாக்க ஊக்கத்துடன் செயற்பாட்டை முன்னெடுக்கின்ற போது, எமது இலக்கை அடைய முடியும் என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு துறைநீலாவணை வித்தி விநாயகர் வித்தியாலயத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சக்தி பாடசாலைச் சமுகத்தைச் சார்ந்ததாக அமைகின்ற போதிலும் பெற்றோர்களின் வழி நடத்தல் இன்றியமையாததாகும். ஒரு பிள்ளையின் கல்வி தொடர்பான சிந்தனை சிறுபராயத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் சூழலின் தன்மைக்கு ஏற்ற வகையில் கல்விக் கட்டமைப்பு மாற்றமடைவதைக் காணலாம்.
இப் பிரதேசமானது கல்வியில் முன்னேற்றமடைந்து வருகின்ற பிரதேசமாகும். இதனைக் தொடர்ச்சியாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கல்விச் சமூகத்தைச் சார்ந்ததாகும். சிறு மாணவர்கள் பெற்றோர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத போதிலும் ஆசிரியர்களின் கருத்தை அதிகம் பின்பற்றுவார்கள் அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் சிறுமாணவர்களை வழி நடத்த வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களைச் சார்ந்ததாகும்.
மாணவர்கள் தமது வாழ் நாளில் காலைக் கடமையினை செவ்வனே நிறைவேற்றுவது அவர்களில் நிலையில் சாதனை என்றுதான் கூற வேண்டும். சிறு பராயத்திலிருந்து மாணவர்களை கற்றலுக்கு ஊக்கப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இக்கிராமத்திலிருந்து பல வைத்தியர்கள் உருவாக வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் எமது கல்வி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் என்றார்.
17 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago