Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'இணைந்த வடகிழக்கில் எமது பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்த்து, ஒன்றாக இருக்கவேண்டிய சூழ்நிலைக்குள் நாம்; தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தமிழ் பேசும் சமூகம் உணரவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கணேஸ் ஞாபகார்த்த கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டி, காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது. நல்லாட்சிக்கு முன்னர் இந்த நாட்டில் நடைபெற்றுவந்த ஆட்சி தொடர்பிலும் அனைவருக்கும் தெரியும். ஆகவே இந்த நாட்டில் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமாயின், தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாயின், இணைந்த வடகிழக்கில் எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சி வேண்டும் என்பதை தமிழ் பேசும் மக்கள் உணரவேண்டும்' என்றார்.
'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டாலே தவிர, சமஷ்டியுடன் கூடிய உயர்ந்தபட்ச அதிகாரப்பரவலாக்கல் உருவாக்கப்பட்டாலே தவிர, இந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாது.
இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை நோக்கும்போது, மும்முனை அதிகார ஆட்சி நடைபெறுகின்றது. மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஆளுநர் ஆட்சி, மத்திய அரசாங்கத்தின் நேரடி உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் மாவட்டச் செயலாளர் ஆட்சி, மாகாணசபை ஆட்சி. இந்த மும்முனை ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணையவேண்டும் என்பதில் நாம்; உறுதியாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். 1961ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரே அங்கு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, நாம் ஒன்றாக இருந்து, எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
51 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago