2021 மார்ச் 08, திங்கட்கிழமை

26,400 ஏக்கர் நெல்வயல் நீரில் மூழ்கியது

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையினால் சுமார் 26,400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.  

தற்போது இடைப்போகத்துக்கான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மண்டூர், வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகளவான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறித்த வெள்ள நீர் இரு தினங்களுக்குள் வடியா விட்டால், செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

களுவாஞ்சிக்குடி விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராம விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்ட 620 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தரவைமுன்மாரிக் கண்டம், குளவெளிக்கண்டம், மேட்டு வட்டைக்கண்டம், வண்ணனான் வெளிக்கண்டம், கரையாவெளிக்கண்டம், ஆகியன மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன  

தரவை முன்மாரிக்கண்டத்தில் 70 ஏக்கரும் குளவெளிக்கண்டத்தில் 30 ஏக்கரும் வண்ணனான் வெளிக்கண்டத்தில் 130 ஏக்கரும் மேட்டுவட்டைக் கண்டத்தில் 350 ஏக்கரும் கரையாவெளிக்கண்டத்தில் 40 ஏக்கருமாக மொத்தம் 620 ஏக்கர் வேளான்மை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .