2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஏறாவூர் இரட்டைக்கொலை: 6 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

ஏறாவூர்ப் பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற  இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 06 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X