Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் மாதாந்தம் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நகரசபைச் செயலாளர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதே மேற்படி புகார் தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு கூட்டுத்தாபன, திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பிரசன்னத்துக்கு அறிவிக்கும்;போது, சில அதிகாரிகள் தொடர்ந்து கூட்டங்களைப் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கப்பட்;டது.
கூட்டங்களைப் புறக்கணிப்பதால் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பிரதேச ஒருங்கிணைப்பு இணைத் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான அலிஸாஹிர் மௌலானா, எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் கோரினர்.
இதற்கு அமைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இது தொடர்பில் மாகாண ஆளுநருக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் பதில் அளித்ததாக அலிஸாஹிர் மௌலானா எம்.பி கூட்டத்தில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பிரதேசத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பின்னடைவு பற்றியும் நிவர்த்தி செய்யவேண்டிய நடவடிக்கை பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025