2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் பெக்கோ இயந்திரகளைப் பயன்படுத்தி மண் அகழ்வதாகக் குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்திலுள்ள ஆற்றோரங்களில் மனிதவலு மூலம் மண் அகழ்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி பெக்கோ இயந்திரங்களைக்; கொண்டு மண் அகழ்ந்து, இரவு வேளைகளில் ஏற்றப்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்;டியுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில்; செவ்வாய்கிழமை (20) நடைபெற்றபோதே, பொதுமக்கள் இக்குற்றச்சாட்டை முன்வைத்தனர்.  

இவ்வாறு மண் கொண்டு செல்வதற்காகப்; பயன்படும்; வீதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாகப் பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக  கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தெரிவித்தன.
 
அங்கு கிராமிய பொருளாதாரப் பிரதி அமைச்சர்  
எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவிக்கையில், 'இரவில் மண்; அகழ்வதற்குச் சட்டம் இல்லை. அவ்வாறு சட்டவிரோதமாக மண் ஏற்றுபவர்களை கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், கோவில்களின் பிரதிநிதிகள் இணைந்து தடுக்க வேண்டும். அவர்களைப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்' என்றார்.  

அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவிக்கையில்,'புத்தம்புரி குளக்கரையில்; மண் அகழ்பவர்கள் தங்களின் வாகனங்களை உட்கொண்டுச் செல்வதற்காக புத்தம்புரி அணைக்கட்டை உடைக்கும் அளவுக்குச் செயற்படுகின்றனர்.  இந்த அணைக்கட்டு  உடைப்பெடுக்கும்போது, விவசாயத்துக்குத் தேவையான  நீரை குளத்தில் சேமிக்க முடியாத நிலைமை ஏற்படும். மண் அகழ்வதில் ஆர்வம் செலுத்துகின்றார்களே தவிர, குளத்து நீரைப் பயன்படுத்துபவர்களைப் பற்றி எந்தவித  சிந்தனையுமின்றிச் செயற்படுகின்றார்கள்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--