Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
யுத்தத்தின் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த 50 யானைகளில் 22 யானைகள் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இறந்துள்ளன. இலங்கையில் ஏறாவூர்ப் பிரதேசத்திலேயே அதிகளவான யானைகள் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதென வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி நா.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
மேலும், இக்காலப்பகுதியில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக இம்மாவட்டத்தில்
47 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் யானைகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால், இப் பிரதேச செயலகப் பிரிவுகளில் 96 கிலோமீற்றர் தூரம் யானை மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடம் இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் மேலும் 50 கிலோமீற்றர் தூரம் யானை மின்வேலி அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
33 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
54 minute ago
1 hours ago