2021 மே 12, புதன்கிழமை

ஓவியக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எம்.அஹமட் அனாம்

பிரம்மகுமாரிகள் ஆன்மிக கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 'பேசும் தூரிகை' ஓவியக் கண்காட்சி பாசிக்குடாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

இக்கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை (04) நடைபெறும்.  'பேசும் தூரிகை' எனும் தலைப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் ஓவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில், தெரிவானவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்போட்டியில் வெற்றி பெற்ற 10 பேருக்கு எதிர்வரும் சனிக்கிழமை (03)  பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக  மட்டக்களப்பு இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளர் எஸ்.சுரேன் தெரிவித்தார்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சிஹாப்தீனுக்கும் ராஜயோகினி வி.கே.சுமனினால் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .