2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா, ஐஸ் போதைப்பொருள்களுடன் ஐவர் கைதாகினர்

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

கஞ்சா போதைப்பொருடன் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த இருவருமாக ஐவரை, இன்று (4) அதிகாலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனரென, அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 850 மில்லிகிராம் கஞ்சாவும் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐஸ் போதைப்பொருளைப் பாவித்த வேளையிலேயே, சந்தேகநபர்களைக் கைது செய்ததாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .