2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்ததாகக் கூறப்படும்  33 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்;ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினர் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் றிபாய் பள்ளிவாசல் வீதியின் முன்பாகவுள்ள ஒழுங்கையில் இச்சந்தேக நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் மட்டக்களப்பு மாவட்;ட போதைவஸ்;து ஒழிப்பு பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்துச் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இச்சந்தேக நபரிடம் 105 கிராமும் 450 மில்லிகிராம் நிறையுடைய 60 கஞ்சா பக்கெட்டுகள் இருந்தமை தெரியவந்தது.

இதனை அடுத்து, இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபரை ஏறாவூர் பொலிஸாரிடம் மட்டக்களப்பு மாவட்;ட போதைவஸ்;து ஒழிப்புப் பிரிவினர் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .