2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், கஞ்சா விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் இன்று வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பெண் சந்தை வீதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த 24 வயதான சந்தேகநபரிடமிருந்து 5,250 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அந்த நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .