Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 17 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டிப் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்; கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை சரீரப்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்று சனிக்கிழமை விடுவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 20.7.2016 அன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இப்பெண் கஞ்சா வைத்திருப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனையிட்டபோது, அவ்வீட்டிலிருந்து 1,600 மில்லிகிராம் கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், அப்பெண்ணையும் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் நேற்றுச் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2021
25 Jan 2021
25 Jan 2021