Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 20 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
தமிழ் மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கிளர்சிகளை இனபேதமாக்கி இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசாங்கங்கள் இன ஒடுக்கு முறை என்ற கொள்கையைக் கையாண்டு உள்நாட்டில் ஏற்பட்ட கிளர்சிக்கு போர்வடிவம் கொடுத்துள்ளன என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (19) பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலநதுகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்நது உரையாற்றுகையில்,
“தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஒடுக்கப்பட்டு சார்த்வீக வழிகள் தடுக்கப்பட்டதன் காரணமாக சிறுசிறு ஆயதங்களை எடுத்து ஏற்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதன் காரணமாக இந்த பிரதேசத்தின் அரசியல் நிலமையும் இலங்கையினுடைய களவாடித்தனம் தணிக்கும் வகையில் இந்தியாவும் இலங்கைத் தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதித்து சில அனுசரணைகள் செய்தது.
இதன் காரணமாக இளைஞர்கள் சார்வீதப் போராட்டம் பொருத்தமானது அல்ல என்ற நிலையில் தீவிரவாதம்தான் இதற்குச் சரியான பதில் என நினைத்து கிளர்ச்சியை அதிகமாக்கிய நிலையில் இந்த கிளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க மறுத்த அரசாங்கம் அதனை ஒரு இனபேதமாகக் கொண்டு இன ஒடுக்குமுறை என்ற கொள்கையைக் கையாண்டு சிறிய போராக்கி அதனை பெரிய போராக்கி உள்நாட்டுக் கிளர்சியை போர் என்ற வடிவத்துக்கு மாற்றியது.
இந்த நாட்டிலே மாறி மாறி வந்த அரசாங்கங்கள். தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகைள மழுங்கடித்து அவற்றுக்கு பிரிவினைவாத சாயம் பூசி பின்பு பயங்கரவாதம் எனும் பெயரைச் சூட்டி 2001 செப்டம்பரிலே நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்பு உலக நாடுகளில் நடைபெற்ற உரிமைப் போர்களை எல்லாம் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் கொண்டுவந்தது.
இதன்காரணமாக அதனை ஒரு வாய்ப்பாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி எங்ககளுடைய உரிமைப் போர் நசுக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் எந்தவிதத்திழலும் மேற்கொள்ளப்படாதவிதத்திலே இங்கிருந்த சர்வதேச நிறுவனங்கள் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற வரைமுறையையும் தாண்டி அரசோடு சாராதா நிறுவனங்களை எல்லாம் வெளியேற்றி சமாதான வலயமொன்றை உருவாக்கி அந்த சமாதான வலயத்துக்குள் மக்களை வரவளைத்து சமாதான வலயத்துக்குள் வந்த மக்களை எந்தவித ஈவிரக்கமற்ற முறையில் கொன்று ஒழித்தனர்.
எந்தவித சாட்சிகளும் அற்ற நிலையில் 17க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று ஒரு கிளர்ச்சி அடக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு சர்வதேச சட்டத்தின் வரையறைகள் எல்லாவற்றையும் தள்ளி எறிந்துவிட்டு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரை காவுகொண்ட போராக இறுதிப் போர் அமைகின்றது.
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி முடிவடைந்ததாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த கொடிய போரினால் தமிழ் சமுதாயம் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு அவர்களுடைய உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அடைக்கலம் தேடி வந்தவர்கள் மீது பல்குழல துப்பாக்கிகள் எறிகளை தாக்ககுதல்கள் மூலம் எங்களுடைய மக்கள் ஆகுதியாக்கப்பட்டார்கள். இந்த உயிர்களை காவுகொடுத்ததன் மூலமாக ஐக்கிய நாடுக்ள சபை கண்திறந்து அவர்கள் விசாரணை என்ற ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரச தரப்பினரும் அந்த விசாரணையில் பங்குதாரர்கபளாக பங்குகொள்வதாக உறுதியளித்து தற்போது விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த விசாரணையில் சர்வதேச சட்டங்கள் தழுவிய மிகப்பெரிய நீதியை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம். எதிரிகளுடைய மன நிலமை அறிந்து எதிரிகளை இந்த விடயம் தொடர்பாக சிந்திக்கச் செய்து நியாயம் எனக் கண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எமது மக்களின் அபிலாசைகளை உள்வாங்கக் கூடிய இதுகாலவரை தேர்தல்களில் எமது மக்கள் வழங்கிய ஆணைகளை கௌரவிக்கின்ற நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை புதிய அரசிலமைபினுடாக நாங்கள் எதிர்பார்து நிற்கின்றோம்.
இந்த தீர்வுத் திட்டத்திற்கு ஆதாரமாக தங்குடைய உயிர்களை ஆகுதியாக்கிய எங்களுடைய உறவுகளை நாங்க் நினைவுகொண்டு அவர்களுடைய நினைவிலே அஞ்சலித்து தற்போது காணப்படும சுமூகமான சூழ்நிலையை சரியான முறையில் கையாண்டு இதுபோன்ற இன்னுமொரு துர்ப்பாக்கியம் ஏற்படாதவகையிலே உறுதியோடு நடந்துசெல்ல வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
31 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
41 minute ago
3 hours ago