2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலியாகத் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆரையம்பதிப் பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தாழங்குடா ஆகிய கிராமங்களின் பிரதான வீதிகளில்; கட்டாக்காலியாக நடமாடிய சுமார் 75 மாடுகளை திங்கட்கிழமை (26)  பிடித்துள்ளதாக அப்பிரதேச சபைச் செயலாளர் என்.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

இந்த மாடுகள் வீதிகளில் அலைந்து திரிகின்றமையால்  போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகள் ஆரையம்பதிப் பிரதேச சபை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.  ஒரு மாட்டுக்கு 5,000 ரூபாயை அபராதமாகச் செலுத்தி மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .