2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

காத்தான்குடியில் 46 குடும்பங்கள் இடம்பெயர்வு

Editorial   / 2019 நவம்பர் 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தொடர்ந்து பெய்து வரும் அழை மழையால், காத்தான்குடியின் பல பகுதிகளிலும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில், புதிய காத்தான்குடி பதுறியா பாடசாலையிலுள்ள இடைத்தங்கள் முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுமாறு காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் கிராம உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X