2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி கோட்டத்துக்கு புதிய கல்விப் பணிப்பாளர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக எம்.எம்.கலாவுதீன், நேற்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய அதிபராகக் கடமையாற்றிய இவர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி, அதன்மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்த வகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டாரவால் 30.01.2020 திகதியிடப்பட்டு, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், முதலாம் தர அதிபர் சேவை அதிபராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .