2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலையில் 3,500 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்த வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 3,500 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர் என, அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, வைத்திய நிபுணர் விடுதித் திறப்பு விழா இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், 'குறைந்த ஆளணி வளங்களைக்; கொண்டு, இந்த வைத்தியசாலையில் நாம் சிறந்த சேவையை வழங்கி வருகின்றோம்.

இந்த வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் விசேட வைத்திய நிபுணர்கள் 4 பேரும்  17 வைத்தியர்களும் உட்பட 128 பேரே உள்ளனர்.

இங்கு தினமும் 600 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதுடன், 400 பேர் கிளினிக்கில் சிகிச்சைக்காக வருகின்றனர். அவ்வாறே, விபத்து மற்றும் விடுதிகளில் தங்கியிருந்தும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.

குறைந்த ஆளணியினரைக் கொண்டு நாம் வைத்திய சேவையை வழங்கி வருகின்றோம். எமது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .