2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியை இடைநிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி, பிரதேச சபைக்கு முன்பாக, ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை(17) நடாத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று, பிரதேச மக்களின் எதிர்ப்பையும் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தடையுத்தரவையும் மீறி, குறித்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை அமைத்து வருகின்றது என்று, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் குடியிருப்பு, மாணவர்களின் குருகுலம் என்பன உள்ள பகுதியில், குறித்த தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்படுகின்றதெனவும், எனவே, கோபுரம் அமைக்கப்படும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சூழலைப் பாதுகாக்கவும் பல்தேசியக் கம்பனிகளின் அத்துமீறல்களை எதிர்க்கவும் ஆர்வமுடையவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--