2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

களி மண் ஏற்றியவர்கள் கைது

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில்  களி மண் ஏற்றிய ஐந்து பேரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், களிமண் ஏற்றிய ஐந்து டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.கே.வஹாப்தீன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை, குறித்த பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போதே,  குறித்த நபர்களை கைதுசெய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை  நாளை புதன்கிழமை, மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .