Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம்
நாடாளுமன்றத் தேர்தலில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) கிழக்கு மாகாணத்திலே வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சரும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும்மான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
போட்டியிடவுள்ள வேட்பாளர்களது பெயர் பட்டியல் ஓர், இரு தினங்களில் வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, முகத்துவாரத்தில் அமைந்துள் சுற்றுலா விடுதியில் நேற்று (14) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தமது கட்சியின் அரசியல் கொள்கைகள், அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்காக கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய பட்டியலை கருத்தில்கொண்டும் கட்சியின் கொள்கைகள், வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து, அவர்களது ஆணையைப் பெறுவதே தமது நோக்கம் என்றும் அந்தவகையில், இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதாக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா, “பொதுத் தேர்தலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைத்து, மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெகு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago