2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தேசியப் பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமெனக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

'மகளிர் தினமாகிய மார்ச் எட்டாம் திகதி முதல் இந்த மாதத்தை நாட்டு மக்களுக்கு இருண்ட நாட்களாக பிரகடனப்படுத்துகிறோம்' எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பால் காந்தி பூங்காவுக்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு நீதி வேண்டும். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் இந்தப் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .