2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

குடிநீர் இணைப்புக்காக பதியவும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்திப் ‪பயனாளிகள் அல்லாத 500 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனாளிகள், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அந்த அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத, ‪சமூர்த்திப் பயனாளிகள் அல்லாத 500 பயனாளிகளுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் படி கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஒதுக்கீடு செய்து செலுத்தி இலவசமாக குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஏறாவூர் பிராந்திய அலுவலகம், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .