2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யாழ்.மாவட்டத்தில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக குழாய்நீர் கிணறுகளை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

யாழ் மக்கட் பணிமனையின் தலைவர் மௌலவி பி. ஏ. எஸ். சுப்யான் விடுத்த வேண்டுகோளுக்கமைய, 6 இலட்சத்து 50 ஆயிரம் ருபாயினை ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் ஒதுக்கீடு செய்துள்ளது. 
 
சோனகத்தெரு, புதிய சோனகத்தெரு மற்றும் வேலணை ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 10 குடும்பங்களுக்கான குடிநீர்த்தேவையினை, இந்தக் குழாய் நீர்க்கிணறின் மூலம் நிறைவு செய்யமுடியும் எனத் தெரிவித்தார். 

இதற்கான நிதியினை, யாழ் மக்கள் பணிமனையின் தலைவருக்கு, இராஜாங்க அமைச்சர் நேற்று திங்கட்கிழமை, தனது காரியாலயத்தில் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், மட்டக்களப்பு கெம்பஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் பொறியியலாளருமான ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். 
 
மேற்கொண்டு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல பாகங்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா ஹிரா பௌண்டேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .