2021 மே 10, திங்கட்கிழமை

'கைதிகளின் விடுதலை நல்லாட்சிக்கு நல்ல சகுணம்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புடையவர்களும் இணைந்து சரியான முடிவை எடுப்பார்களாயின் அது நல்லாட்சிக்கு நல்ல சகுணமாக அமைவதுடன், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பச்சைக்கொடியாகவும் அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை  ஞாயிற்றுக்கிழமை அவர் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.' என்றார்.

'தற்போது 32 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 30 பேர்  விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்துடன்,  116 கைதிகள் தங்களுக்கு புனர்வாழ்வு தந்து தங்களை விடுவிப்பதற்கு சம்மதம் அளித்து கையொப்பங்களை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்னிடம் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தின்  மூலம் தமது விடுதலையை பெற முயற்சிப்பதானது நியாயமாக பார்க்கப்படவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X