2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் 400க்கும் மேற்பட்டோருக்கு உளவியல் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உளவியல் பாதிப்புக்குள்ளான 400க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்று  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரத்த வங்கி மற்றும்  விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக் கட்டடங்களுக்;கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கடந்த செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  'உறவின் உதயம்' எனும் உளவியல் சிகிச்சைப் பிரிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரிவில் 02 வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .