2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.துசாந்தன்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுஇடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு காணப்படுவதால், பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுவதாக,  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மகிழடித்தீவு பொதுவிளையாட்டு மைதானத்தின் மதிலோரப்பகுதியில், இறப்பர் போத்தல்கள், இறப்பர் பாத்திரங்கள் குவிக்கப்பட்டு ஒருவாரத்துக்கும் மேலாக அகற்றப்படாமல் இருப்பதாக, பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, மகிழடித்தீவு பொதுவைத்தியசாலையில் உள்ள உக்கக்கூடிய கழிவுகள் ஒரு வாரத்துக்கு மேலாக அகற்றப்படாதுள்ளடன், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்துக்கு முன்பாகவும் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குப்பைகள் அகற்றப்படாதுள்ளதால், டெங்கு நுளம்பு பெருகுவதுடன் சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக, பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .