Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 25 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரசாங்க நிருவாக சக்கரத்தின் அடிமட்டத்தில் இருக்கின்ற மிக முக்கியமான சேவையாளர்கள் என்கின்ற வகையில் ஒவ்வொரு கிராம சேவகரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ். ஞானசிறி இன்று(25) தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
கிராம சேவகர்கள் பல்வேறு நிருவாகப் பொறுப்புக்களைச் சுமந்த வண்ணம் 24 மணிநேரமும் இயங்குகின்ற அரச நிருவாகச் சக்கரத்தின் அதிமுக்கியமான அடிமட்ட நிருவாகிகளாவர்.
ஆயினும், கிராம சேவையாளர்கள் சுமந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கள் காரணமாக அவர்கள் தமது கடமைகளின்போது பல்வேறு சவால்களையும் உயிரச்சுறுத்தல்களையும், ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சமீப காலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டதும், தாக்கப்பட்டதும், பழி சுமத்தப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதுமான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது குறித்து நாம் பாதுகாப்புக்குப் பொறுப்பான உயரதிகாரி என்கின்ற வகையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடுவதற்கு உள்ளோம்.
நிருவாகத்துக்குப் பொறுப்பான மாவட்ட உயரதிகாரி என்கின்ற வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் வெகுவிரைவில் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.
கிராம சேவகர்கள் பல கடமைகளை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் பணித்துள்ளது.
தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவரச் செய்து முடிக்க முற்படுகின்றபோது அந்தக் கடமையை நிறைவேற்ற விடாது பல சந்தர்ப்பங்களில் கிராம சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள், இழப்புக்களைச் சந்திக்க வேண்டியும் வந்துள்ளது.
எனவே, கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தினால் பணிக்கப்பட்ட தங்களது கடமையை சரிவரச் செய்ய முற்படுகின்றபோது ஏற்படுத்தப்படுகின்ற தடைகள், இடைஞ்சல்கள், அச்சுறுத்தல்கள், என்பவை பற்றி பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற வேண்டியது அவசியமாகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
4 hours ago