2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிழக்கின் எழுச்சி: முஸ்லிம்களுக்கெதிரான சூழ்ச்சி

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கின் எழுச்சி என்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை மழுங்கடிக்க செய்து, இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இருந்து எமது சமூகத்தை தூரமாக்குவதற்கு எடுக்கப்படுகின்ற பாரிய சூழ்ச்சி என கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

'கிழக்கின் எழுச்சி' தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலியின் மகனும் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் மகனும் இணைந்து கிழக்கின் எழுச்சிக் கோஷத்தை முன்னெடுத்துக்கொண்டு சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முனைந்துள்ளனர்.

18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதற்காக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் பணம் பெற்றுக் கொண்டார் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. அது உண்மை என்றால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டோருக்கும் முரண்படுவோருக்குமே கிழக்கின் எழுச்சி தேவைப்படுகிறது.

நல்லாட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் சிறுபான்மை சமூகங்களும் அரவணைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கிழக்கின் எழுச்சிக் கோஷம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .