2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களையும் கவனத்திற்கொள்ள வேண்டும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஊடகத்துறை அமைச்சால் வடக்கு நோக்கிய தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் பயணத்தை வரவேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்பிலும்; ஊடக அமைச்சு கவனத்திற்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஊடக அமைச்சர் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மேற்கொண்டுள்ள நல்லிணக்கப் பயணத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களாகிய நாம்  வரவேற்கின்றோம்.

இதன்போது, பாதிக்கப்பட்டுள்ள வடபுல ஊடகவியலாளர்களின் நிலைமை தொடர்பில் ஏனையவர்கள் அறியக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஊடகவியலாளர்களுக்கிடையிலும் தொடர்பு  ஏற்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலிருந்த அரசாங்கங்கள் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்பாடு செய்யாத நிலையில், புதிய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதை நாம்; வரவேற்கின்றோம். இதேபோன்று, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தவேண்டும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கோரி நிற்கின்றோம்.

கடந்த யுத்த சூழ்நிலையின்போது கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், அதிகளவான ஊடவியலாளர்கள் நாட்டை விட்டுச் செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர். எனவே, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக அமைச்சு கவனத்திற்;கொள்ள வேண்டுமென்பதுடன், மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும்; முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .