2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை அமர்வு அறிக்கைகள் நூலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'கிழக்கு மாகாண சபை அமர்வு தொடர்பான அறிக்கைகள், முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தொகுக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட நூலகங்களுக்குஅனுப்பப்பட்டு வருகின்றன' என சபை நடவடிக்களுக்குப் பொறுப்பான முகாமைத்துவ உதவியாளர் ஜே. ஷர்மிலா நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் இடம்பெறுகின்ற விவாதங்கள், அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள், உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் உள்ளிட்டவை மக்களது பார்வைக்குக் கிட்ட வேண்டும் என மாகாண முதலமைச்சரின் ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'இந்த நடவடிக்கையின் மூலம் கிழக்கு மாகாண சபையில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள வழியேற்படும்.

இதன்படி, கடந்த ஜனவரி மாத சபை அமர்வுகளில் இடம்பெற்ற விடயங்களை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தொகுக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்குட்பட்ட நூலகங்களுக்கும் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்காக அனுப்பட்டு வருகின்றன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X