2021 மே 06, வியாழக்கிழமை

கோவில் உண்டியல் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர்க் கிராமத்தில் அமைந்துள்ள கூமாவடி செல்வவிநாயகர் கோவிலின் உண்டியலொன்று இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இக்கோவிலின் பிரதான நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு புதன்கிழமை (27) இரவு உள்நுழைந்தோர், கோவிலின் வெளிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர். இதன் பின்னர், அந்த உண்டியலை கோவில் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கோவிலில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வந்த அக்கோவில் பூசகர், பிரதான கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும் உண்டியல் வீசிக் கிடந்ததையும் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸில் அப்பூசகர் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .