2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு ; எண்மர் கைது

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஜூன் 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு உழவு இயந்திரங்கள் நேற்று (01) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகள் எட்டுப்பேரும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏஏ. வாஹிட் தெரிவித்தார்.

களுமுந்தன்வெளி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்களைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆற்றங்கரையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்படுகின்ற போதிலும் இவர்கள் விதிமுறைகளைமீறி ஆற்றிற்குள் மணல் எடுத்ததாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையினால் ஆற்றில் பாரிய குழிகள் ஏற்படுவதாகவும் மாரி மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்க வாய்ப்பு உண்டாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கரடியனாறு பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றபோதிலும் வெவ்வேறுபட்ட உபாயங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X