2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 மே 31 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனக் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷான் சி.குரூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி, வெல்லாவெளி, பங்குடாவெளி, வலையிறவு, களுவாஞ்சிக்குடி, மங்கிக்கட்டு, கன்னன்குடா, ஆரையம்பதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக இரவு வேளைகளில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், கைப்பற்றப்பட்ட வலைகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன எனவும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .