2021 மே 06, வியாழக்கிழமை

'சமத்துவம் இல்லாமையினாலேயே இனப்பிரச்சினை ஏற்பட்டது'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சம உரிமையும் சமமான வாய்ப்பும் சமத்துவமும் வழங்கப்படாமையினாலேயே, இனப்பிரச்சினை ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் சர்;வோதய மண்டபத்தில்  சனிக்கிழமை (03) நடைபெற்ற ஐக்கிய மதங்களின் ஒன்றியத்தினுடைய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இனங்களுக்கு சமத்துவம், சம உரிமை, சமமான வாய்ப்பு ஆகியவற்றை வழங்கினால் இனப்பிரச்சினை ஏற்படாது. சிறிய சுய இலாபங்களுக்காக மதங்களின் பெயரால் சமூகங்களை பிரிக்கின்ற  காரியங்களை மதத் தலைவர்கள் செய்யக்கூடாதென்பதுடன்,  சமூகங்களின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு மதங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புகின்ற பணியில் மதத் தலைவர்கள் ஈடுபடவேண்டும்' என்றார்.  

'மத போதனைகளை பின்பற்றினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். அனைத்து மதங்களும் ஒற்றுமை, சகோதரத்துவத்தை போதிக்கின்றது. எதிர்காலத்தில் சமூகங்களுக்கிடையில்,   இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டை நல்லாட்சியின் பால் கொண்டுசெல்ல நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'; எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .