Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்கின்ற பிரதேசங்களில் அச்சமூகங்களுக்கு பாதிப்பில்லாதவாறு வட்டார எல்லை நிர்;ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (17) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'காத்தான்குடி மற்றும் கல்குடாப் பிரதேசங்களில் எல்லை நிர்ணயத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்கிறோம். ஆரம்பத்தில் எவ்வாறு வர்த்தமானி மூலம் எல்லைகள் நிர்;ணயிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டதோ, அந்த வரையறைகள் மாற்றப்படாதவாறு எல்லைகள் வரையறுக்கப்பட்டு வட்டாரங்கள் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்' என்றார்.
'இந்நிலையில் கடந்த 21.8.2015 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில், காத்தான்குடியின் எல்லை மற்றும் வட்டாரங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள படத்துடனான வரைபில் கூறப்பட்டுள்ள எல்லைகள், 1987.5.12 அன்று வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியின் பிரகாரம் முற்றுமுழுதாக மாற்றப்பட்டுள்ளது.
பழைய வரைவில் காத்தான்குடியில் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய வரைவில் அது 10 வட்டாரங்களாகக் குறைக்கப்பட்டு, உள்ளூராட்சிமன்றத்துக்கு தெரிவுசெய்யக்கூடிய மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் நிலைமையுள்ளது.
44,000 க்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட காத்தான்குடியில் 10 வட்டாரங்கள் போதாது. காத்தான்குடியில் 18 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ள நிலையில், இவற்றை மையப்படுத்தியதாக வட்டாரங்கள் பிரிக்கப்பட வேண்டும். மேலும், சில கிராம அலுவலர் பிரிவுகள் கூடுதலான குடும்பங்களைக் கொண்டுள்ளன. இது சமமான குடும்பங்களைக் கொண்ட பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும். இதன் அடிப்படையில் காத்தான்குடியில் 18 வட்டாரங்களாக நிர்;ணயிக்கப்பட வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.
புதிய வர்;த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள காத்தான்குடி மற்றும் அதனோடு தொடர்புடைய வட்டார எல்லை நிர்;ணயத்தை முற்றாக நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கான ஆட்சேபனை தொடர்பில் எல்லை நிர்ணயக்குழுவுக்கும் அதன் தவிசாளருக்கும் தெரிவிக்கவுள்ளோம்.
தற்போதைய எல்லை நிர்ணயம் விசேட வர்த்தமானி மூலம் பதிவாகுமாயின். அது சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை உருவாக்கும். அப்பிரச்சினைகள் தவிர்க்கப்பட வேண்டும்.;' எனவும் அவர் தெரிவித்தார்.
59 minute ago
1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
6 hours ago
6 hours ago