2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சமூகமட்ட விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை இல்லாது ஒழிப்பதற்காக சமூகமட்ட விழிப்புணர்வுக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அம்மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகஸ்தர் கனகசபை சுதர்சன், இன்று (13) தெரிவித்தார்.

சட்டவிரோதச் செயற்பாடுகளை இல்லாது ஒழித்து, அச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.கணேசராஜாவின் கவனத்துக்கு சமூக  நலன் விரும்பிகள் கொண்டுசென்றனர்.

இந்நிலையில் சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பிரிவு, சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, சட்ட உதவி ஆணைக்குழு, பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, மத்தியஸ்தசபைத் தவிசாளர்கள், கிராமசேவை அலுவலர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகஸ்தர், கிராம மற்றும் அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகஸ்தர்கள், சமூக நல தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டதாக குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .