2025 ஜூலை 12, சனிக்கிழமை

சயனைட் குப்பி மீட்பு

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன.

இதுதொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்டதுடன், கைக்குண்டு செயலிழக்கச்; செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .