2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

செயற்பாட்டு குடிமக்கள் செயற்றிட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களுக்கிடையில் சகவாழ்வு போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைத்து செயற்பாட்டுக் குடிமக்கள் எனும் செயற்றிட்டம் இடம்பெற்று வருவதாக சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எம். அஷ்மி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் கவுன்சில் (British Council), சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனம் (Muslim Aid), தொழிற் பயிற்சி அதிகாரசபை (Vocational Training Authority) ஆகியவை இணைந்து செயற்பாட்டுக் குடிமக்கள் பயிற்சித் திட்டம் (Active Citizens Training Programme) திட்டத்தின் ஒரு அங்கமாக “இளைஞர்களும் சமூக மீள் எழுச்சியும்” (Youth and Community Resilience) செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.

இத்திட்டத்துக்கான மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள்  இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் கள ஆய்வுகளில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமுலாக்கப்படக் கூடிய பரீட்சார்த்த திட்டங்களை சமூகங்களுடன் இணைந்து வடிவமைக்க உள்ளனர் என்றும் சர்வதேச முஸ்லிம் உதவி நிறுவனத்தின் தேசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷ்மி, மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .