பேரின்பராஜா சபேஷ் / 2017 மே 26 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்
சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஜனன ஆண்டு விழாக் கொண்டாட்டத்தையொட்டி, மட்டக்களப்பு - கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட விபுலானந்தரின் உருவச் சிலை இன்று (26) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி கலந்துகொண்டு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் உருவச் சிலையை திரை நீக்கம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு மற்றும் பாடசாலை சமூகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .