2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி; 59 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ஹாசிமால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சிப் பாசறைகளில் பங்குபற்றியிருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 59 பேரின் விளக்கமறியல் இம்மாதம் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (10) அழைத்து வரப்பட்டு, நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில்,  ஹம்பாந்தோட்டை, நுவரெலியா ஆகிய இடங்களிலிருந்த ஆயுதப் பயிற்சி முகாம்களில், பயிற்சிப்பெற்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சஹ்ரானின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேர், கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெண்ணொருவர் உட்பட ஐவர், இரு சந்தர்ப்பங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 59 பேரின் விளக்கமறியலும், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீடிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .