2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்களுக்கு பொற்காலமாகலாம்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன்

 புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின்  ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக தெரிவித்த  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக் கின்றனர்.

 நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின்  மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்  போதே   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு  மேலும் கருத்து  தெரிவிக்கையில்: கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின்  ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில்  கிழக்கு மாகாணத்தில்  எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலாறுகளே தான்உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியானது வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியாகும்.  இது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம்.இதற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை மொட்டு மலர்வதற்கு சாதகமாக அமைந்தது.  பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை அலையாக வலம் வந்தமை மூலமாக கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

 இதனை அறியாத சில அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மை விமர்சித்தனர். ஆனால் இன்று மௌன நிலைக்குத் தள்ளப்பட்டு வாய்ப்பூட்டுபோடப்பட்டுள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திக்காக நாம்  கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .